பாஜக ஆட்சியில் இந்தியா தொழில்துறையில் முன்னேற்றம் – பிரதமர் மோடி பெருமிதம்

பாஜக ஆட்சியில் இந்தியா தொழில்துறையில் முன்னேறியிருப்பதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள புலம் பெயர்ந்த இந்தியர்களைச் சந்தித்து பேசினார். டோக்கியோவில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இந்தியா தொழில்துறையில் முன்னேறியிருப்பது பற்றி அவர் விளக்கினார்.

2014-ஆம் ஆண்டு, தான் பிரதமராக பொறுப்பேற்ற போது தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 140-வது இடத்தில் இருந்ததாகவும், தற்போது 40 இடங்கள் முன்னேறி 100-வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உலக அளவில் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், இது அனைவரின் கூட்டு முயற்சி என்றும் மோடி கூறினார்.

Exit mobile version