கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிபர் ஜி ஜின்பிங் ஆய்வு

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் முதன்முறையாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆயிரத்து 13 பேர் உயிரிழந்தனர்.  42 ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவியதால் புத்தாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் மீண்டும் பணிக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

நாளுக்கு நாள் நோய் பரவி வரும் நிலையில், சீன அதிபர் எங்கு இருக்கிறார் என தெரியாமல் இருந்தது. இந்நிலையில், திடீரென சோயங் மாகாணத்தில் உள்ள ஒரு மையத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து வெளியில் வந்த சீன அதிபர் அங்கிருந்த மக்களை பார்த்து கையசைத்தார்.

Exit mobile version