ரணில் விக்ரமசிங்கேயின் பாதுகாப்பு படைகள் வாபஸ் – அதிபர் சிறிசேனா

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கியதையடுத்து, அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பு மற்றும் வாகனங்களையும் அதிபர் சிறிசேனா வாபஸ் பெற்றுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றதையடுத்து, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து தான் விலக போவதில்லை என ரனில் விக்ரமசிங்கே அறித்திருந்தார்.

இதனையடுத்து, அதிபர் சிறிசேனா, பதவி நீக்க கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கே பதவி விலக தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததையடுத்து, அவரின் தனிப்பட்ட பாதுகாப்பையும், அவருக்கு அளிக்கப்பட்ட வாகனங்களையும் அதிபர் சிறிசேனா வாபஸ் பெற்றார்.

அந்த பாதுகாப்பையும், வாகனங்களையும் புதிய பிரதமர் ராஜபக்சேவுக்கு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபரின் இந்த நடவடிக்கையால், இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version