தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பிற்காக கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் தீபாவளி பண்டிகைக்காக அமைக்கப்பட்டுள்ள புற காவல் நிலையங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் திறந்து வைக்கப்பட்டது. இதனை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் திறந்து வைத்தார். வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பாண்டிபஜார் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்றச்சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க, காவல் துறையினர் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.