சபரிமலையில் வரும் 27-ம் தேதி மண்டல பூஜை – முன்னேற்பாடுகள் தீவிரம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை சபரிமலையில் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி ஆரன்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தங்க அங்கி வரும் 23-ம் தேதி காலை 7 மணியளவில் ரதத்தில் வைக்கப்பட்டு ஊர்வலமாக புறப்படும். இந்த ஊர்வலம் கோழஞ்சேரி, பத்தனம்திட்டா உள்ளிட்ட பகுதிகள் வழியாக 26-ம் தேதி சன்னிதானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும். இதையடுத்து மறுநாள் மண்டல பூஜை நடைபெறும். அன்றிரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.

சபரிமலையில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு வரை சன்னிதானம், பம்பை, நிலக்கல், இலவுங்கல் ஆகிய இடங்களில் 144 தடை அமலில் இருக்கும்.

Exit mobile version