கோஸ்டாரிகாவின் தெற்கே பனாமா எல்லையில் அமைந்துள்ள கோல்ஃபிடோ (Golfito) பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்நாட்டு நேரப்படி மாலை 5 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால், அச்சம் அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், மீட்பு பணிகளை கோஸ்டாரிகா அரசு முடுக்கி விட்டுள்ளது.