மே 2 ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்தலாம்… ஆனா ஒரு கண்டிஷன்?

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் மொத்தம் 3 லட்சத்து 46 ஆயிரத்து 519 தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 350 படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.

80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, மொத்தம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 453 தபால் வாக்குப்படிவம் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய சத்யபிரதா சாகு, கொரோனா நோயாளிகளுக்கு தபால் வாக்குப்படிவம் வழங்கப்படவில்லை எனவும் கூறினார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, புரட்சித்தலைவி ஜெயலலிதா குறித்து திமுக எம்.பி. தயாநிதிமாறன் அவதூறாக பேசியது குறித்து, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார். 

 

Exit mobile version