பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. 1949 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி ஆந்திராவில் பிறந்த கோடி ராமகிருஷ்ணா, தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தார். மங்கம்மா காரி மனவாடு, ஸ்டேஷன் மாஸ்டர், பாரத் பந்த் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஹாரர் திரைப்படங்களை இயக்கி 90களில் தெலுங்கு திரையுலகில் கோலோச்சிய கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் தமிழில் வெளியான அம்மன் திரைப்படம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

அம்மனுக்கே சவால் விடும் பயங்கர வில்லனாக நடித்த ராமி ரெட்டியின் நடிப்பு பலரையும் பயமுறுத்தியது. அதேபோல் கோடி ராமகிருஷ்ணாவின் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து 2009ஆம் ஆண்டு வெளியான அருந்ததி திரைப்படமும் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ப்ரீத் (அருந்ததி )

கடைசியாக இவரது இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு Nagarahavu என்ற கன்னடத் திரைப்படம் ரிலீஸானது. அதுவே அவருடைய முதல் கன்னடப் படமாகவும், அவர் இயக்கிய கடைசித் திரைப்படமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version