உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா கேரள மாநிலம் திருச்சூரில் களைகட்டியுள்ளது.
திருச்சூர் பூர விழாவின் ஷேத்ர சடங்குகள் இன்று காலை தொடங்கியது. இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். பிரமாண்டத்திற்கு பஞ்சம் இன்றி நடைபெறும் பூரம் விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்கும் அணி வகுப்பு நிகழ்ச்சி, நீண்ட நேரம் நடைபெறும் வான வேடிக்கைகள் நடைபெற உள்ளன.
இதில் பங்கேற்க தங்க ஜரிகையால் ஆன பட்டகத்தை அணிந்து கோயிலில் இருந்து வெளியே வந்த தெச்சிக்கோட்டுகாவு ராமச்சந்திரனை, ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர். பூரத்தையோட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ள நிலையில், வடக்கு நத்தம் சிவன் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.