வீடியோ கேம் விளையாட்டின்போது தகராறு: துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உயிரிழப்பு

தாம்பரம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மாணவர் முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலிடெக்னிக் வகுப்பறையில் முகேஷ் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் இருந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முகேஷ் உயிரிழந்தார். வீடியோ கேம் விளையாடும்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலே துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

Exit mobile version