அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகளை பின்பற்றி அங்கீகாரம் பெற வேண்டும் என மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தங்களது நோயியல் ஆய்வகங்கள், ரத்த மற்றும் தடுப்பூசி முகாம்கள், கால்நடை மருத்துவமனைகள் போன்ற மருத்துவ கழிவுகள் வெளிவரும் இடங்களில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதியை பின்பற்ற வேண்டும் எனவும், இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பம் செய்து அங்கிகாரம் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.