பொள்ளாச்சி விவகாரம்:சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரிய மனுவில் டிஜிபி பதிலளிக்க உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக டிஐஜி அந்தஸ்தில் இருக்கும் பெண் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து டிஐஜி அந்தஸ்தில் இருக்கும் பெண் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி 1 0 பெண் வழக்கறிஞர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நடந்த உண்மையை கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவி வழங்க நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தஹில் ரமானி தலைமையிலான அமர்வு, ஜூன் 7ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது.

Exit mobile version