சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்கி பயனடையுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்
சென்னையில் 10-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. 5 வயதிற்குட்பட்ட சுமார் ஏழு லட்சத்துக்கு 13 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக ஆயிரத்து 644 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது.