தமிழக காவல்துறை, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பேப்பர் பயன்பாடற்ற அலுவலமாக மாறுகிறது.
தமிழக காவல்துறையில் புகார் அளிப்பது, அரசு பணிகளில் சேருவதற்கான நன்னடத்தை சான்று பெறுவது உட்பட பெரும்பாலானவை ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும், தமிழக டிஜிபி உத்தரவுகள் தொடங்கி, டிஎஸ்பிக்கள் உத்தரவு வரையில், அனைத்து தகவல் பரிமாற்றங்களும் இ-மெயில்கள் மூலமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், அனைத்து ஆவணங்கள் பரிமாற்றமும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளன.