திண்டிவனம் அருகே ஏ.சி. இயந்திரம் வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம், கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளது.
திண்டிவனம் காவேரிபாக்கம் சுப்பராயன் தெருவில் வசித்து வந்த ராஜி (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருக்கையில் வீட்டின் அறையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து. ஏற்பட்டது. இதில், ராஜீ, அவரது மனைவி கலா மற்றும் மகன் கௌதம் ஆகிய மூவர் உடல்கருகி உயிரிழந்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது இறுதி சடங்கு முடிவடைந்த நிலையில், தீ விபத்து தொடர்பாக ராஜூ இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த விபத்தில் மூத்த மகன் கோவர்தனின் அறையில் எவ்வித சேதமும் ஏற்படாதது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.