காவல்துறையினர் தற்காப்புக்காகவே மணிகண்டனை சுட்டனர்: விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர்

விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தாதா மணி என்கிற மணிகண்டன் சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், ரவுடி மணிகண்டனை கைது செய்வதற்காக சென்ற போது, காவல் உதவி ஆய்வாளர் பிரபுவை, மணிகண்டன் முதலில் கத்தியால் வெட்டியதாகவும், இதையடுத்து மற்றொரு உதவி ஆய்வாளர் பிரகாஷையும் அவர் வெட்ட முயன்றார் எனவும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், காவல்துறையினர் தங்களது தற்காப்புக்காகவே மணிகண்டனை சுட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version