சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் தொடர்பாக அவரது தந்தை அப்துல் லத்தீப்பிடம், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் ஆணையாளர் ஈஸ்வரமூர்த்தி விசாரணை மேற்கொண்டார்.
ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்துள்ள கேரள சுற்றுலாத்துறை வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான விடுதியில் அப்துல் லத்தீப்பிடம் மத்திய குற்றப்பிரிவு ஆணையாளர் ஈஸ்வரமூர்த்தி விசாரணை நடத்தினார். சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் லத்தீப், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும், மகளின் உயிரிழப்பு தொடர்பான ஆவணங்களை கொடுத்துள்ளதாகவும் கூறினார். பாத்திமா லத்திப் போன்று இனி ஒருவர் உயிரிழக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் அப்துல் லத்தீப் புகார் மனு ஒன்றை அளித்தார். தனது மகள் மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிவரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.