தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடுகிறார். மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version