ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால், பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் ரூபாய் கோடியில் இருந்து 30 லட்சம் ரூபாய் கோடியாக உயர்ந்துள்ளது. பொருளாதார பிரச்சினையை சரிகட்ட முடியாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு திணறி வருகின்ற நிலையினை காரணம் காட்டி, இம்ரான்கான் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தானின் எதிர்கட்சிகள் ஒன்றுக் கூடி ஆசாதி மார்ச் என்ற பெயரில் நாடு முழுவதும் பிரமாண்ட போராட்டத்தை இம்மாத இறுதியில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இவற்றிற்கு பதிலளிக்கு விதமாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் இம்ரான்கான், ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், நான் ராஜினாமா செய்ய முடியாது என்றும் பதிலளித்துள்ளார். மேலும் அவர்களது போராட்டத்துக்கு வெளிநாட்டு சக்திகளின் ஆதரவு இருக்கிறது என்பதை தான் அறிவதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version