2023 ஆம் ஆண்டிற்குள் தனியார் ரயில் சேவையை அறிமுகம் செய்ய திட்டம்

2023 ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பயணிகள் ரயில் சேவையை முழுமையாக அரசு நடத்தி வருகிறது. 2020 ஆம் ஆண்டிற்குள் ரயில் சேவையை தனியார் மயமாக்குவதற்கான ஒப்பந்தங்கள் பெறப்பட்டு 2023-ம் ஆண்டுக்குள் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த அளவில் சென்னையிலிருந்து பெங்களூர், கோவை, மதுரை வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வேயில் 150 தனியார் ரயில்களை கொண்டு முதல்கட்ட தனியார் சேவையை வழங்க உள்ளதாகவும் வழித்தடங்கள், கட்டணங்கள் போன்ற பல பிரச்சினைகளை சரி செய்ய கட்டுப்பாட்டாளர்கள் இருப்பார்கள் எனவும் ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version