மலையாள சினிமாவின் முதல் நடிகை பி.கே.ரோஸி – தலித் சமூகத்திலிருந்து வந்து வென்றுகாட்டிய பெண்!

உலகைப் பொறுத்தவரை பெண் அடிமைத்தனமானது காலம் காலமாக நடந்துகொண்டு இருக்கிறது. உலகின் நம்பர் ஒன் நாங்கள் தான் என்று மார்தட்டும் அமெரிக்காவில் கூட இன்னும் ஒரு பெண் குடியரசுத் தலைவர்கூட இல்லை. இந்தியாவில் பெண் அடிமைத்தனம் பற்றி சொல்லக்கூடத் தேவையில்லை மிகவும் மோசமாகதான் இருந்தது, இருந்தும் வருகிறது. அப்படியிருக்க அந்தப் பெண் தலித் சமூகத்தினை சேர்ந்தவராக இருந்தால் இன்னும் கடினம்தான். அதுவும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த அன்றைய கேராளாவில் தலித் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அப்படியிருக்க மலையாள சினிமாவின் முதல் பெண்ணாக நடிக்க வந்தவர் பி.கே.ரோஸி. அவர் கிறித்துவ தலித் சமூத்தினை சேர்ந்தவர் என்பதால் பல எதிர்ப்புகள் குவிந்தது.

பி.கே. ரோஸி 1903 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பிறந்தார். தற்போது இவரின் 120வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் அதன் doodle படமாக இன்றைக்கு பி.கே.ரோஸியின் கார்டூனை வைத்துள்ளது. இவர் நடித்த முதல் திரைப்படம் கே.சி.டேனியல் இயக்கத்தில் வந்த விகதகுமரன் ஆகும். இத்திரைப்படத்தில் ரோஸி ஒரு நாயர் பெண்ணாக நடித்திருப்பார். இந்தத் திரைப்படம் வெளியான சமயம் ரோஸியினை கல்லால் தாக்கினர் ஆதிக்க சமூகத்தினர். அவர்களிடம் இருந்து தப்பி தமிழ்நாட்டில் ராஜம்மாள் என்ற பெயரில் வாழ்ந்து வந்தார்.

Exit mobile version