அமெரிக்காவில் அடுக்குமாடிக் கட்டடம் மீது ஹெலிகாப்டர் மோதல்; விமானி உயிரிழப்பு

அமெரிக்காவில் அடுக்குமாடிக் கட்டடம் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், மேன்ஹேட்டன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 51 மாடி கட்டடத்தில், ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் கட்டடம் லேசாக குலுங்கியது. இதில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக, கட்டடத்தில் இருந்தவர்கள் எந்தவொரு காயமும் இன்றி உயிர் பிழைத்தனர்.

நியூயார்க் நகரில் மழை பெய்து, மோசமான வானிலை ஏற்பட்டதால், ஹெலிகாப்டரை தரையிறக்க முற்பட்டதே விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய தயாராக இருப்பதாகத் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Exit mobile version