கோவை நஞ்சப்பா சாலையில் சிறை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள கைதிகளின் மறுவாழ்வுக்காக கோவை, வேலூர், பாளையங்கோட்டை, புழல் உள்ளிட்ட இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் பங்க் அமைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், கோவை நஞ்சப்பா சாலையில் பெட்ரோல் பங்க் அமைக்க சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 22 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததையடுத்து கைதிகளுக்கான பெட்ரோல் பங்க்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதல் விற்பனையை கோவை சரக சிறைத்துறை துணை தலைவர் அறிவுடை நம்பி, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் மானஷ்ரவுத்ராய் ஆகியோர் தொடங்கிவைத்தனர். தமிழகத்தில் முதல்முறையாக 23 தண்டனை கைதிகளை கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்க் இது என்பது குறிப்பிடத்தக்கது.