பெட்ரோல் விலை குறைவு – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னையில், பெட்ரோல் விலையில் இன்று 19 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருவதன் காரணமாக பெட்ரோல் , டீசல் விலை கடந்த 15 நாட்களாக குறைந்து வருகிறது. இன்று பெட்ரோல் 19 காசுகள் குறைந்து 82 ரூபாய் 46 காசுகளுக்கு விற்பனையாகிறது.

டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை 3 ரூபாய் 54 காசுகளும், டீசல் விலை 2 ரூபாயும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பெட்ரோல், விலை குறைவால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version