சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகளும், டீசல் விலை 8 காசுகளும் அதிகரித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் உயர்ந்து, 74 ரூபாய் 48 காசுகளாக உள்ளது. டீசல் விலையும் 8 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 80 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

Exit mobile version