பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை குறைப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி

பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் விலை 32 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து 71 ரூபாய் 85 காசுகளாகவும், டீசல் விலை 32 காசுகள் குறைந்து லிட்டருக்கு 66 ரூபாய் 84 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version