பெட்ரோல், டீசல் விலை முறையே 10 காசுகள், 15 காசுகள் குறைப்பு

பெட்ரோல் லிட்டருக்கு 72 ரூபாய் 82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 68 ரூபாய் 26 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன.

இதையடுத்து, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து 72 ரூபாய் 82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து 68 ரூபாய் 26 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version