சிவகாசியில் மூடப்பட்டுள்ள பட்டாசு தொழிற்சாலைகளை திறக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

சிவகாசியில் மூடப்பட்டுள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

பேரியட் நைட்ரேட் என்ற மூலப் பொருளை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கவும், சரவெடி தயாரிக்கவும் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இனி தயாரிக்கப்படும் பட்டாசுகள் பசுமை பட்டாசாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பசுமை பட்டாசு தயாரிக்க முடியாது என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை காலவரையின்றி மூடுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில், பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலை பாதுகாத்திடவும், சுற்றுச்சூழல் விதியில் இருந்து விலக்கு அளித்திடவும், விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் பட்டாசு உற்பத்தியாளர்கள் மனு அளித்துள்ளனர்.

Exit mobile version