தஹில் ரமானியின் இடமாற்றப் பரிந்துரையை ரத்து செய்யக் கோரும் மனு தள்ளுபடி

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியின் இடமாற்றப் பரிந்துரையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கொலிஜியம் பரிந்துரைத்த முடிவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் சேசசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்டதாகக் கருதும் நீதிபதிகள் தான் வழக்குத் தொடுக்க முடியும் எனவும் மற்றவர்கள் வழக்குத் தொடுக்க முடியாது எனவும் கூறி, இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனத் தள்ளுபடி செய்தனர்.

Exit mobile version