வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,199 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 126.75 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 3 ஆயிரத்து 996 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1,360 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதே போல், வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,634 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 62.93 கனஅடியாகவும், நீர் இருப்பு 4,187 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 2,90 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.