பிக்பாக்கெட் அடிக்க முயன்ற இரண்டு மதுபோதை ஆசாமிகளுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நாகர்கோவிலில் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையத்தில், மது அருந்திய இரண்டு நபர்கள், வழிபறியில் ஈடுபட முயன்றனர். இதைக் கண்ட பொதுமக்கள் இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வழிப்பறி திருடர்களுக்கு சாதகமாக பேசிய ஒருவரையும், பொதுமக்கள் சரமாரியாக தாக்கி, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.