தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாராகும் பால்கோவாவின் விற்பனை அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இங்கு தயாராகும் பிரசித்தி பெற்ற பால்கோவா வகைகள் வெளி மாநிலங்களுக்கும்,வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீபாவளியையொட்டி இதன் விற்பனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர்கள் பெறப்படுகின்றன. பால்கோவாவை வாங்க வாடிக்கையாளர்களும் அதிக ஆர்வம் காட்டி வருவதால் இதன் விற்பனை சூடு பிடித்துள்ளது. தூய்மையான பாலில் அப்பகுதியில் தயாராகும் பால்கோவா வகைகளுக்கு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version