ஈரோடு மாவட்டத்தில் புதிய குடிநீர் திட்டம் தொடக்கம் – தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

தாகத்தை போக்கும் வகையில் புதிய குடிநீர் திட்டத்தை ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியத்திலுள்ள எண்ணமங்கலம், சங்கராப்பாளையம், கெட்டிசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் கோடை காலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவது வழக்கமாகும். இதனால், கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வரட்டுப்பள்ளம் அணை பகுதியில், புதிய குடிநீர் திட்டப்பணிகளை, சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். துரிதமாக நடைபெற்ற இப்பணிகள் 3 மாதங்களிலேயே நிறைவு பெற்றது.

தொடர்ந்து, வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து, சங்கராப்பாளையம், எண்ணமங்கலம் மற்றும் கெட்டிசமுத்திரம் ஊராட்சிக்கு, குழாய்கள் மூலம் நீர் எடுத்து செல்லவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, அந்தந்த ஊராட்சியில் கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, தண்ணீரை சேமித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த புதிய குடிநீர் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். புதிய குடிநீர் திட்டத்தால் இனி எந்த காலங்களிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படாது என மகிழ்ச்சி தெரிவித்த பொதுமக்கள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version