கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் அச்சமடைய தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். எனினும், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.