பேருந்தை சிறைபிடித்த மக்கள் !

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், உதயத்தூரில் முறையாக இயங்காத அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். நாகர்கோவிலிருந்து ராதாபுரம் வழியாக உதயத்தூர் செல்லும் அரசு பேருந்து சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை எனவும், சில நேரங்களில் பேருந்து வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை சிறைப்பிடித்தனர்.

Exit mobile version