விருதுநகர் பகுதியை குப்பையில்லா நகராக மாற்ற நகராட்சி எடுத்து வரும் புதிய நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் நகராட்சியில் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் மற்றும் கடைகளில் துப்புரவு தொழிலாளர்கள் வாங்கும் குப்பைகளை அந்தந்த தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் கொட்டி வந்தனர்.இவற்றால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதை சரி செய்யும் வகையில் விருதுநகர் நகராட்சி அதிகாரிகள் கடந்த இரண்டு மாதமாக புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதன்படி துப்புரவு தொழிலாளர்கள் வீடுகள் மற்றும் கடைகளில் வாங்கும் குப்பைகளை தெரு ஓரங்களிலோ அல்லது சாலையோரங்களிலோ கொட்டாமல் அங்கிருந்து வாகனம் மூலம் நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு சேர்க்கின்றனர். இதனால் சாலை மற்றும் தெரு ஓரங்களில் தேக்கமடைந்து வந்த குப்பைகள் தற்போது காணப்படவில்லை என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.