வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மயில்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகளவில் காணப்படும் தேசிய பறவையான மயில்களை கோடை வெப்பத்தில் இருந்து காக்க தமிழக அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட மயில்கள் வசித்துவந்த நிலையில், கஜா புயல் பாதிப்பால் தற்போது மயில்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக நிலவிவரும் வெயிலின் தாக்கத்தாலும் மயில்கள் மிகுந்த அவதியுற்று வருகின்றன.

இந்நிலையில் மயில்களை காக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மயில்களுக்கு குடில்கள் அமைத்து தண்ணீர் மற்றும் உணவுகள் அளித்து அவற்றை காக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மயில்களை காக்க விவசாய சங்கங்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உடனடி நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் பொதுமக்களும் அரசுக்கு ஆதரவாக செயல்பட கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version