அரசு தொடக்கப் பள்ளிக்கு சீர் எடுத்து வந்த விவசாய தொழிலாளர்கள்

வத்தலக்குண்டு அருகே அரசு தொடக்கப் பள்ளிக்கு சீர் எடுத்து வந்து விவசாய தொழிலாளர்கள் பள்ளிக்கு வழங்கினர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கோணியம்பட்டி கிராம அரசு தொடக்கப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலும் விவசாய தொழிலாளர்களின் குழந்தைகள் இப்பள்ளியில் படிக்கின்றனர்.

தங்கள் குழந்தையின் கல்வி தரத்தை மேம்படுத்த இக்கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை சீராக வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, கிராமத்தில் உள்ள வீதிகளில் உறுமி மேளம் முழங்க கல்வி உபகரணங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து மன மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வழங்கினர்.

விவசாய கூலி வேலைக்கு மட்டுமே செல்லும் இக்கிராம மக்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திரட்டி சீர் கொண்டு வந்து கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version