பாரா ஆசிய விளையாட்டு – இந்திய அணி சாதனை

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் பாரா ஆசிய விளையாட்டு போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இந்திய குழுவினர் 72 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்.

15 தங்கம், 23 வெள்ளி , 33 வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 9-வது
இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2016 ம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதித்த தமிழக வீரர் மாரியப்பனுக்கு இந்த போட்டியில் வெண்கல பதக்கமே கிடைத்துள்ளது.

இருந்த போதும் ஒட்டுமொத்த அணியாக பார்க்கும் போது இந்திய அணி சாதித்துள்ளது. கடந்த 2010 பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா 14 பதக்கங்களும், 2017-ல் 33 பதங்கங்களும் தான் கிடைத்தன. தற்போது கடந்த முறையை விட இரண்டு மடங்கிற்கு மேல் பதக்கங்கள் வாங்கி அசத்தியுள்ளது.

Exit mobile version