தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பாண்டியர்கள் காலத்து நங்கூரம் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் நீர் வற்றியுள்ளதால் பாண்டிய மன்னர்கள் காலக் கட்டடங்கள், முதுமக்கள் தாழிகள், எலும்புத் துண்டுகள், கண்டறியப் பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து, கொற்கையில் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் துறைமுகம் இருந்ததற்கு சான்றாக கல்லால் ஆன நங்கூரம் முதன்முதலாக கண்டெடுக்கப் பட்டுள்ளது. இதனை அந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். பாடப் புத்தகங்களில் படித்த வரலாற்றுச் சின்னங்களை நேரில் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த பொதுமக்கள், அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.