நீர் நிலைகளில் மண் அரிப்பை தடுக்கும் பனை மரங்கள்

உலகம் வெப்ப மயமாதலை தடுக்கும் விதமாக, மரம் நடும் விழிப்புணர்வுகளில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வரும் நிலையில், திருவண்ணாமலையில் உள்ள மங்கலம் சுற்றுவட்டார இளைஞர்கள் பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த இராந்தம் கிராம பள்ளி மாணவர்கள் விடுமுறை நாட்களில், பனை விதைகளை விதைத்து வருகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் பனைமரத்தில் இருந்து நுங்கு கிடைப்பது போல, ஜூன், ஜூலை மாதத்தில் பனம்பழம் கிடைக்கப்பெறுகிறது. நார்சத்து மிக்க இப்பழத்தை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், அதன் விதைகளை, அப்பகுதிகளில் இம்மாணவர்கள் நடவு செய்கின்றனர்.

பனை, வேர் முதல் நுனி வரை பயன்தரக்கூடியது என்பதாலும், மண் அரிப்பை தடுக்கும் என்பதாலும் இப்பகுதி மாணவர்கள் பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர்.

Exit mobile version