இந்திய தாக்குதலை பார்த்து திரும்பிச் சென்ற பாகிஸ்தான் போர் விமானங்கள்

இந்திய விமானப்படை தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானங்கள் திரும்பிச்சென்றதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இன்று அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படையின் மிராஜ்-2000 ரக விமானங்கள் குண்டுவீசி தாக்குதலில் ஈடுபட்டன.

12 போர் விமானங்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலாகோட், சகோதி, முசாபர்பாத் ஆகிய இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஜெய்ஷ் இ முகம்மது இயக்க கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் விமானப்படை பின் வாங்கியதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த நாட்டின் எப் 16 ரக விமானங்கள், இந்திய விமானப்படையின் வலிமையை கண்டு திரும்பிச்சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version