பாக். நீதிமன்றத்தில் நடைபெறும் மும்பை தாக்குதல் வழக்கு -குற்றவாளிகள் விடுதலையாக வாய்ப்பு?

மும்பை தாக்குதல் குறித்து பாகிஸ்தானில் நடைபெற்று வரும் வழக்கில் இருந்து 7 பயங்கரவாதிகளும் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2008-ம் ஆண்டு மும்பையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் நிகழ்த்திய அதி பயங்கர தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 166 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க கூடாது என்று பாகிஸ்தானுக்கு ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுத்தன.

இதன் காரணமாக வேறுவழியின்றி லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி ஜாகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 7 பேரை பாகிஸ்தான் கைது செய்தது. அங்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றும் வரும் இந்த வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க பாகிஸ்தான் அரசு ஆர்வம்காட்டவில்லை. இதனால் மும்பை தாக்குதலில் தொடர்புடைய 7 பேரும் விடுலையாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Exit mobile version