அட்சய திருதியை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள வணிகப் பகுதிகளில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்குவதில் பொது மக்கள் ஆர்வம் காட்டுவதால் நகை கடையை சுற்றியுள்ள பகுதிகளில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் உள்ள வணிகப் பகுதிகளில் பாதுகாப்பு நலன் கருதி 200 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
துணை ஆணையாளர் தலைமையில் 2 உதவி ஆணையாளர்கள், 8 ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள், 60 காவலர்கள் மற்றும் 100 ஊர் காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலையான சிசிடிவி கேமராக்கள் மற்றும் 11 நடமாடும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.