ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை அரசிதழில் வெளியாகி உள்ளது. அதன்படி, முதல்கட்டமாக வருகிற 27 ஆம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேல்தல் நடைபெறுகிறது. 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும் டிசம்பர் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் டிசம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.