“நாட்டு நாட்டு” பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்குமா?..இன்று நடக்கவிருக்கிறது ஆஸ்கார் விழா…!

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கார் விருது விழாவனது அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 95வது ஆஸ்கார் விருதுவிழா நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த தீபிகா படுகோன் விருது வழங்குபவராக கலந்துகொள்ள இருக்கிறார். முக்கியமாக கடந்த வருடம் இந்திய சினிமாவினை திரும்பி பார்க்க வைத்த ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலானது ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் உள்ளது.Oscars 2023 nominations Highlights: 'Naatu Naatu' from 'RRR' gets nod for  Best Original Song

இந்தப் பாடலுக்கு தெலுங்கின் ஜாம்பவான் இசையமைப்பாளரான எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் இந்த பாடலில் தங்களது நடனத் திறமையைக் காட்டியிருப்பர். திரையரங்கத்தில் இந்தப் பாடலுக்கு எழுந்து ஆடாத இரசிகர்களே இருந்திருக்க மாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்தமானதாக மாறிவிட்டது. இந்தியாவின் ஜாம்பவான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் வென்றால் நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version