தேனியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவதானப்பட்டி, வடுகபட்டி, பெரியகுளம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்தரநாத்குமாரையும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மயில்வேலையும் ஆதரித்து பிரசாரம் செய்த துணை முதலமைச்சருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேனி நாடாளுமன்ற வேட்பாளராக ரவீந்தரநாத்குமார் வெற்றி பெற்ற பிறகு அப்பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றித்தருவார் என்று உறுதியளித்தார்.
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகி ராஜனை ஆதரித்து துணை முதலமைச்சர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், முதலமைச்சராக முடியவில்லை என்ற பொறாமையில் ஸ்டாலின் செயல்படுவதாகவும், அவரது பாச்சா பழிக்காது என்றும் குறிப்பிட்டார்.