கொள்ளிடத்தில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து 60ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் உபரிநீர் முழுமையாக காவிரியில் திறக்கப்படுகிறது. இதேபோன்று, முக்கொம்பிலிருந்து கொள்ளிடத்தில் 19ஆயிரம் கன அடியும், கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 16ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் நிலைமையைச் சமாளிப்பதற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். கும்பகோணம் தீயணைப்பு நிலையத்தில் ரப்பர் படகுகள், உயிர் காக்கும் உடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.