பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி – நெருப்பை மூட்டி மக்கள் குளிரை சமாளித்து வருகின்றனர் 

உதகையில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பொது இடங்களில் நெருப்பை மூட்டி மக்கள் குளிரை சமாளித்து வருகின்றனர்.
நீலகிரியில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.

இந்த ஆண்டு முன்கூட்டியே பனிப் பொழிவு தொடங்கியுள்ளதால், டிசம்பர் மாதம் உறைபனி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உதகையில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பனியின் தாக்கம் காலை 10 மணிக்கு மேல் நீடிப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள், நெருப்பை மூட்டி குளிரை சமாளித்து வருகின்றனர்.

 

Exit mobile version