மேற்கிந்திய தீவுக்கெதிரான ஒரு நாள் போட்டி – வீரர்கள் அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, ஒரு நாள் போட்டியில் விளையாடும் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆசிய கோப்பையில் இடம்பிடித்திருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

விராட் கோலி கேப்டனாகவும் ரோஹித் சர்மா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள். மேலும் ஷிகர் தவான், அம்பதி ராயுடு, மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி , ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது, ஷர்துல் தாக்கூர், கே.எல்.ராகுல். ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Exit mobile version